இக்னிஸ் மாடலை டோக்யோ மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தும் மாருதி சுசுகி

இக்னிஸ் மாடலை சில நாட்களாகவே மாருதி சுசுகி  நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த மாடல் டோக்யோ மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் பலேனோ மாடலை வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

இக்னிஸ் மாடல் பாக்ஸ் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ப்ரீமியம் கிராஸ் ஓவர் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் 1.0 லிட்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 1.0 லிட்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் என்ஜின் மாடல் இந்தியாவில் கிடைக்குமா என்பது சந்தேகமே அதற்கு பதிலாக ஸ்விப்ட் மாடலில் உள்ள 1.2 லிட்டர் என்ஜினில் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவில் இந்த மாடல் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படும் எனவும் 5 லட்சம் விலைக்குள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.