இந்தியாவில் வெளியிடப்பட்டது மசராட்டி லேவண்டே SUV

இத்தாலியை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான மசராட்டி நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு இறுதியாக, லேவண்டே SUV  மாடலை ரூ 1.45 கோடி ஷோரூம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த வருடத்தில், இது மசராட்டி நிறுவனத்தின் இரண்டாவது மாடல் ஆகும். இந்த மாடல் மொத்தம் மூன்று வேரியன்ட்டுகளில் கிடைக்கும். இந்த மாடல் 2016  ஆம் ஆண்டு ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தான் மசராட்டி நிறுவனத்தின் 100 ஆண்டு கால வரலாற்றில் முதல் SUV  என்பது குறிப்பிடத்தக்கது. 

மசராட்டியின் பாரம்பரிய முகப்பு கிரில் மற்றும் டிசைன் தத்பரியத்தில் மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த மாடல் 3.0 லிட்டர் V6 டர்போ டீசல் என்ஜினில் மட்டும் கிடைக்கும். இந்த என்ஜின் 275Bhp திறனையும் 600Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.9 வினாடிகளில் மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 230 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது. 

இந்த மாடலில் 8 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேடிக்  கியர் பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் கிடைக்கும். இவை மட்டும் இல்லாமல் இந்த மாடலில் எலெக்ட்ரிக் பவர் ஸ்டேரிங், அட்வான்ஸ்ட் டிரைவிங் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், ஹைவே அசிஸ்ட், லேன் கீப் அசிஸ்ட், ட்ராபிக் சைன் ரெகக்னைசேஷன் மற்றும் பிளைன்ட் ஸ்பாட் அசிஸ்ட் என ஏராளமான வசதிகள் இந்த மாடலில் கிடைக்கும். 

வேரியன்ட் வாரியாக ஷோரூம் விலை விவரம்: 

லேவண்டே டீசல் - ரூ 1.45  கோடி 
லேவண்டே டீசல் கிரான் ஸ்போர்ட் - ரூ 1.49  கோடி 
லேவண்டே டீசல் கிரான் லூஸ்ஸோ  - ரூ 1.54  கோடி 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.