அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது மசராட்டி லேவண்டே SUV

இத்தாலியை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான மசராட்டி  அதிகாரப்பூர்வமாக  லேவண்டே SUV  மாடலை வெளிப்படுத்தியது. இது தான் மசராட்டி நிறுவனத்தின் முதல் SUV  என்பது குறிப்பிடத்தக்கது. 100 ஆண்டு கால வரலாற்றில் மசராட்டி நிறுவனம் தற்போது தான் ஒரு SUV  மாடலை  வெளிப்படுத்தியுள்ளது.

மசராட்டியின் பாரம்பரிய முகப்பு கிரில் மற்றும் டிசைன் தத்பரியத்தில் மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எஞ்சின் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும் இது ஒரு அதிக செயல்திறன் கொண்ட மாடலாக தான் இருக்கும். 

இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீஸல் என இரண்டு எஞ்சின்களிலும் கிடைக்கும். மேலும் 8 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேடிக்  கியர் பாக்ஸில் கிடைக்கும். அனைத்திற்கும் மேலாக இந்த மாடல் யுரோ6 மாசுக்கட்டுப்பாட்டில் மட்டுமே கிடைக்கும்.

இந்த மாடலில் எலக்ட்ரானிக் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது.  இந்த மாடல் அதிக தொழில்நுட்பங்கள் கொண்ட காராகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.