இரண்டாவது ஷோரூமை பெங்களூருவில் தொடங்கியது மசராட்டி

மசராட்டி நிறுவனம் தனது இரண்டாவது  ஷோரூமை பெங்களூருவில் தொடங்கியது. இந்த ஷோரூமை ஜுபிலன்ட் ஆட்டோவொர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கியுள்ளது. இந்து தென் இந்தியாவின் முதல் மற்றும் இந்தியாவின் இரண்டாவதுஷோரூம் ஆகும். இந்த வருடம் செப்டம்பர் மாதம் தான் முதல் ஷோரூமை டெல்லியில் தொடங்கியது மசராட்டி நிறுவனம். AMP  சூப்பர் கார் நிறுவனத்துடன் சேர்ந்து இந்த ஷோ ரூமை மசராட்டி நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த ஷோ ரூம் மதுரா ரோட்டில் அமைந்துள்ளது.

 இந்த ஷோ ரூமில் கிப்ளி , குவாட்ரோபோர்ட் டீசல், க்ரன் டூரிஸ்மோ, க்ரன் கேப்ரியோ மற்றும் குவாட்ரோபோர்ட் GTS போன்ற அணைத்து மசராட்டி  கார்களும் கிடைக்கும். 

மசராட்டி கார்களின் தோராயமான விலை:-

மசராட்டி கிப்ளி  - ரூ.1.1 கோடி 

மசராட்டி குவாட்ரோபோர்ட் டீசல் - ரூ.1.5 கோடி 

மசராட்டி க்ரன் டூரிஸ்மோ - ரூ.1.8 கோடி 

மசராட்டி க்ரன் கேப்ரியோ - ரூ.2.0 கோடி 

மசராட்டி குவாட்ரோபோர்ட் GTS - ரூ.2.2 கோடி 

தனது மூன்றாவது ஷோரூமை மும்பையில் தொடங்க இருக்கிறது மசராட்டி.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.