மூன்றாவது ஷோரூமை மும்பையில் தொடங்கியது மசராட்டி

இத்தாலியை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான  மசராட்டி தனது மூன்றாவது  ஷோரூமை மும்பையில் தொடங்கியுள்ளது. மசராட்டி நிறுவனத்திற்கு ஏற்கனவே டெல்லி மற்றும் பெங்களுரிவில் ஷோரூம்கள் உள்ளது.

இந்த ஷோ ரூம் விமான நிலையம் அருகில் சான்டகுரூஸ் எனும் இடத்தில உள்ளது. மேலும் மரோல் மற்றும் அந்தேரி கிழக்கு பகுதிகளில் சர்வீஸ் செண்டர்களும் தொடங்கப்பட்டுள்ளன. 10,000 சதுர அடிகளில் அணைத்து விதமான மசராட்டி கார்களையும் சர்வீஸ் செய்யும் அளவிற்கு உபகரணங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக மசராட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த ஷோ ரூமில் கிப்ளி , குவாட்ரோபோர்ட் டீசல், க்ரன் டூரிஸ்மோ, க்ரன் கேப்ரியோ மற்றும் குவாட்ரோபோர்ட் GTS போன்ற அணைத்து மசராட்டி  கார்களும் கிடைக்கும். 

மசராட்டி கார்களின் தோராயமான விலை:- 

மசராட்டி கிப்ளி  - ரூ.1.1 கோடி 

மசராட்டி குவாட்ரோபோர்ட் டீசல் - ரூ.1.5 கோடி 

மசராட்டி க்ரன் டூரிஸ்மோ - ரூ.1.8 கோடி 

மசராட்டி க்ரன் கேப்ரியோ - ரூ.2.0 கோடி 

மசராட்டி குவாட்ரோபோர்ட் GTS - ரூ.2.2 கோடி

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.