துபாய் மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் மசராட்டி ஆல்பியெரி

மசராட்டி நிறுவனம் நான்கு இருக்கை கொண்ட ஆல்பியெரி  கான்செப்ட் காரை 2015 ஆம் ஆண்டு துபாய் மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் அறிவித்துள்ளது. 

இந்த மாடலின் கான்செப்ட் கடந்த ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் நான்கு பேர் அமரக்கூடிய இருக்கை கொண்டதாக இருக்கும். மேலும் மசராட்டி நிறுவனத்தின் அணைத்து சிறப்புகளும் இதிலும் இருக்கும். 

சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியாவில் மறுபடியும் நுழைந்தது மசரட்டி நிறுவனம். இந்தியாவில் கிப்ளி , குவாட்ரோபோர்ட் டீசல், க்ரன் டூரிஸ்மோ, க்ரன் கேப்ரியோ மற்றும் குவாட்ரோபோர்ட் GTS ஆகிய 5 கார்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்த காரின் என்ஜின் பற்றிய விவரங்கள் மற்றும் இதர தொழில்நுட்ப விவரங்கள் அனைத்தும் துபாய் மோட்டார் கண்காட்சியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.