வெளிப்படுத்தப்பட்டது மெர்சிடிஸ் பென்ஸ் AMG GLC43 SUV

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் AMG GLC43 SUV  மாடலை வெளிப்படுத்தியது. இந்த மாடல் அதிகாரபூர்வமாக 2016 நியூ யார்க் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படும். இது ஏற்கனவே இருக்கும் மாடலின் அதிக செயல்திறன் கொண்ட AMG  ப்ராண்ட்   மாடல் ஆகும்.

இந்த மாடலில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் நிறைய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில்  முன்புற கிரில், பின்புற குரோம் புகைபோக்கி மற்றும் பிரத்தியேக அலாய் வீல் ஆகியவை மாற்றப்பட்டுள்ளது. உட்புறத்திலும் ஸ்போர்ட்டி இருக்கைகள், AMG  கிட் என  ஏராளமான பகுதிகள் மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 3.0 லிட்டர் ட்வின் டர்போ V6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 362 Bhp  திறனையும் 520 Nm  இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் 9G-tronic  ஆட்டோமேடிக் கியர் பாக்ஸும் 4MATIC எனும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.8 வினாடிகளுக்குள் கடக்கும் மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 250 Kmph  வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது. விரைவில் ந்த மாடல் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க மார்கெட்டுகளில் வெளியிடப்படும் அதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.