ரூ. 74.5 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது மெர்சிடிஸ் பென்ஸ் AMG C43

மெர்சிடிஸ் பென்ஸ்  நிறுவனம் AMG SLC43 மாடலை ரூ. 74.35 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில்  இந்தியாவில் வெளியிட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த வருட இறுதிக்குள் 12 மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே 12 மாடல்களை வெளியிட்டுவிட்டது இது பதிமூன்றாவது மாடல் ஆகும்.

இந்த  மாடலில் 3.0 லிட்டர் டர்போ சார்ஜ் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 367 Bhp  திறனையும் 520 Nm  இழுவைதிறனையும் வழங்கும். இதன் திறன் 9 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது. இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.7 வினாடிகளிலும்  அதிகபடச்சமாக  மணிக்கு 250 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது.

வடிவமைப்பை பொறுத்தவரை சி-கிளாஸ் மாடலின் வடிவமைப்பு உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக AMG மாடலுக்கான உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  LED  முகப்பு விளக்குகள், 8 காற்றுப்பை, 14 ஸ்பீக்கர் ஹார்மன் சவுண்ட் சிஸ்டம் என  சி-கிளாஸ் மாடலில் உள்ள அனைத்தும் இந்த மாடலில் கிடைக்கும். இந்த மாடல் ஆடி 5S மாடலுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.