ரூ 2.55 கோடி விலையில் வெளியிடப்பட்டது மெர்சிடிஸ் பென்ஸ் AMG S63 கூப்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் AMG S63 கூப் மாடலை ரூ 2.55 கோடி டெல்லி ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இது இந்த ஆண்டு இந்தியாவில் நான்காவது AMG மாடல் ஆகும். மேலும் இது S கிளாஸ் மாடலின் ஸ்போர்ட்டியர் AMG வெர்சன் ஆகும். AMG S63 கூப் மாடல் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

AMG S63 கூப் மாடலின் வெளிப்புற மற்றும் உட்புற தோற்றத்தில் சில ஒப்பனை மேம்பாடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் வெளிப்புறத்தில் AMG கிரில், புதிய முகப்பு விளக்குகள், புதிய அலாய் வீல், சன் ரூப் முன்புற மற்றும் பின்புற பம்பர் ஆகியவையும், உட்புறத்தில் AMG மாடல்களில் உள்ளது போன்ற அலங்காரங்கள் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற AMG மாடல்களில் உள்ள அணைத்து வித வசதிகளும் இந்த மாடலிலும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் புதிய 4.0 லிட்டர் பை டர்போ V8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 612 bhp திறனும் 900 Nm இழுவைதிறனும் கொண்டது. இந்த திறன் 9 ஸ்பீட் கொண்ட AMG ஸ்பீட்ஷிபிட் டிரான்ஸ்மிஷன் மூலம்   வீலுக்கு கடத்தப்படுகிறது. இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.5 வினாடிகளிலும் அதிகபடச்சமாக மணிக்கு 250 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.