இந்த வருட இறுதிக்குள் வெளியிடப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் C300 கேப்ரியோலேட்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த வருட இறுதிக்குள் திறந்த மேற்கூரை கொண்ட C300 கேப்ரியோலேட் மாடலை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த மாடல் 2016 ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.  மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த வருட இறுதிக்குள் வெளியிட இருக்கும் 12 மாடல்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.

இந்த மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 242 Bhp திறனையும் 370 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.8 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. இந்த மாடலில் 9 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் அதிக பட்சமாக மணிக்கு 250 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.  

C - கிளாஸ்  மெர்சிடிஸ் பென்ஸ் மாடலில் உள்ள அனைத்து சிறப்பம்சங்களும் இதில் உள்ளது. இதன் உட்புறம் அப்படியே C - கிளாஸ் மாடலின் வடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த மாடலின் மேற்கூரை 20 வினாடிகளில் திறந்து மூடும் தன்மை கொண்டது. மேலும் இந்த மேற்கூரை 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் போதும் 20 வினாடிகளில் திறந்து மூடும் வல்லமை கொண்டது. இந்த மாடல் ரூ. 60 லட்சம் முதல் ரூ. 70 லட்சம் விலை கொண்டதாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.