மெர்சிடிஸ் பென்ஸ் C63 S AMG மாடல் 1.3 கோடி விலையில் வெளியிடப்பட்டது

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் C63 S AMG மாடலை வெளியிட்டது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் 2015 ஆம் ஆண்டு முடிவுக்குள் 15 மாடல்களை வெளியிடுவதாக இருந்தது. ஏற்கனவே 9 மாடல்களை இந்த வருடத்தில் மட்டும் வெளியிட்ட நிலையில் இன்று  1 மாடலை வெளியிட்டது. 

இந்த மாடல் C - கிளாஸ் மாடலின் அடிப்படியில் உருவாக்காப்பட்ட அதிக திறன் கொண்ட  AMG மாடல் ஆகும். இந்த மாடல் 4.0 லிட்டர் ட்வின் டர்போ V 8 என்ஜினில் கிடைக்கும். இந்த என்ஜின் தான் AMG GT S மாடலிலும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 510 bhp திறனை வழங்கும். 

இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. மேலும் அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். இந்த வேகமும் எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 1.3 கோடி டெல்லி ஷோரூம் விலையில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் BMW M 3 மாடலுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும்.  

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.