2017 ஷாங்காய் ஆட்டோ கண்காட்சியில் வெளிப்படுத்தப்பட்டது மெர்சிடிஸ் பென்ஸ் கான்செப்ட் A செடான்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கான்செப்ட் A காம்பேக்ட்  செடான் மாடலை 2017 ஷாங்காய் ஆட்டோ கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் MFA (Modular front architecture) பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் மெர்சிடிஸ் பென்ஸ் AMG GT-R மாடலின் முகப்பு கிரில் வடிவமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் புதிய டிசைன் தாத்பரியத்தில் பெரிய ஜன்னல்கள், சிறிய ஓவர் ஹேங் மற்றும் அதிக ஐடா வசதி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த மாடல் 4750 மில்லி மீட்டர் நீளமும், 1870 மில்லி மீட்டர் அகலமும் மற்றும் 1462 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது.

வெளிப்புற டிசைன் தவிர எஞ்சின் மற்றும் உட்புற வடிவமைப்பு போன்ற எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. இதன் தயாரிப்பு நிலை மாடல் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.