சீனாவில் வெளிப்படுத்தப்பட்டது மெர்சிடிஸ் பென்ஸ் GLB கான்செப்ட்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் GLB கான்செப்ட் மாடலை 2019 ஆம் ஆண்டு ஷாங்காய் மோட்டார் கண்காட்சியில் வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் GLA மற்றும் GLC மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்படும். மேலும், இந்த மாடல் GLA மற்றும் GLC மாடல் போல் அல்லாமல் பாக்சி வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மெர்சிடிஸ் பென்ஸ் GLB கான்செப்ட் மாடல் 4634mm நீளமும், 1890mm அகலமும், 1900mm உயரமும் மற்றும் 2829mm வீல் பேசும் கொண்டது. இந்த மாடல் GLA மற்றும் GLC மாடல் போல் அல்லாமல் ஒரு முழுமையான சுவ மாடல் போன்ற தோற்றத்தை தருகிறத்து. மேலும் மற்ற மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் உள்ள அணைத்து விதமான வசதிகளும் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் GLB கான்செப்ட் மாடல் ஏழு இருக்கை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் தான் மூன்று வரிசை இருக்கை கொண்ட மாடலாக வடிவமைக்கப்படும் முதல் மெர்சிடிஸ் பென்ஸ் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. 

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவன எஞ்சின் தொடர்பான எந்த ஒரு விவரங்களை வெளியிடவில்லை. மேலும், இந்த மாடல்  8-ஸ்பீட் டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 4MATIC ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடனும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் GLA மற்றும் GLC மாடல்களுக்கு இடையிலான விலையில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.