ரூ.74.9 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது மெர்சிடிஸ் பென்ஸ் GLE400 பெட்ரோல்

மெர்சிடிஸ் பென்ஸ்  நிறுவனம் பெட்ரோல் என்ஜின் கொண்ட  GLE400 மாடலை ரூ. 74.9 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில்  இந்தியாவில் வெளியிட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த வருட இறுதிக்குள் 12 மாடல்களை வெளியிய திட்டமிட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே ஆறு மாடல்களை வெளியிட்டுவிட்டது இது ஏழாவது மாடல் ஆகும். மற்ற GLE  மாடல்களில் உள்ள அனைத்து வசதிகளும் இதிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 3.0 லிட்டர் ட்வின் டர்போ V 6 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 328 Bhp திறனையும் 480 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.6வினாடிகலில் கடக்கும் வல்லமை கொண்டது மேலும் அதிகபட்சமாக மணிக்கு 247 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். இந்த மாடலில் 7 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ள கம்பர்ட், ஸ்போர்ட், ஸ்லிப்பரி, இண்டுவிடுவள் மற்றும் ஆப்-ரோடு எனும்   ஐந்து வித டிரைவிங் மாடுகள் அனைத்து வித சாலைகளிலும் சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை தரும். சிறப்பான விற்பனையை பதிவு செய்து வரும் இந்த மாடல் GLE 250 d, GLE 350 d, GLE 400 மற்றும் GLE450 AMG கூப் என நான்கு விதங்களில் கிடைக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.