ரூ.82.9 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது மெர்சிடிஸ் பென்ஸ் GLS400 4MATIC

மெர்சிடிஸ் பென்ஸ்  நிறுவனம் பெட்ரோல் என்ஜின் கொண்ட  GLS400 4MATIC மாடலை ரூ. 82.9 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில்  இந்தியாவில் வெளியிட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த வருட இறுதிக்குள் 12 மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே ஏழு  மாடல்களை வெளியிட்டுவிட்டது இது எட்டாவது மாடல் ஆகும்.

இந்த மாடலில் 3.0 லிட்டர் ட்வின் டர்போ V 6 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 333 Bhp திறனையும் 480 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும்  இந்த மாடலில் 9 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் 4MATIC எனும் ஆல் வீல் ட்ரைவ் சிஸ்டமும் AIRMATIC  எனும் சஸ்பென்ஷன்  சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ள கம்பர்ட், ஸ்போர்ட், ஸ்லிப்பரி, இண்டுவிடுவள் மற்றும் ஆப்-ரோடு எனும்   ஐந்து வித டிரைவிங் மோடுகள்  அனைத்து வித சாலைகளிலும் சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை தரும்.

LED  முகப்பு விளக்குகள், பனோராமிக் சன்ரூப், 8 காற்றுப்பை, 14 ஸ்பீக்கர் ஹார்மன் சவுண்ட் சிஸ்டம் என  டீசல் மாடலில் உள்ள அனைத்தும் இந்த மாடலில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் SUV  மாடலின் S-கிளாஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மெர்சிடிஸ் பென்ஸ்  நிறுவனம் இந்த வருடம் நிறைய பெட்ரோல் என்ஜின் கொண்ட  மாடல்களை வெளியிட்டுள்ளது.  ஏறக்குறைய மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அணைத்து மாடல்களுமே தற்போது பெட்ரோல் எஞ்சினுடன் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.