இந்தியாவில் வெளியிடப்பட்டது மெர்சிடிஸ் பென்ஸ் AMG GT-R மற்றும் AMG GT ரோட்ஸ்டெர்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் AMG GT ரோட்ஸ்டெர் மாடலை ரூ 2.19 கோடி ஷோரூம் விலையிலும் மற்றும் AMG GT-R மாடலை ரூ 2.23 கோடி ஷோரூம் விலையிலும் வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களுமே இரண்டு பேர் மட்டுமே அமரக்கூடிய ஸ்போர்ட்ஸ் கார் மாடல் ஆகும்.

மெர்சிடிஸ் பென்ஸ் AMG GT-R

AMG GT-R மாடல் GT குடும்பத்தில் உள்ள மற்ற மாடல்களை விட அதிக திறன் கொண்டது. இந்த மாடலில் 4.0 லிட்டர் கொண்ட ட்வின் டர்போ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 585 Bhp  திறனையும் 700 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். இந்த திறன் 7 ஸ்பீட் கொண்ட டியூவல் கிளட்ச் மூலம் பின்புற வீலுக்கு வழங்கப்படும். இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.6 வினாடிகளிலும்  அதிகபடச்சமாக  மணிக்கு 318 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது.

மெர்சிடிஸ் பென்ஸ் AMG GT ரோட்ஸ்டெர்

இது AMG GT மாடலின் திறந்த மேற்கூரை கொண்ட மாடல் ஆகும். மேலும் இது AMG GT-R மாடலின் திறந்த மேற்கூரை கொண்ட மாடல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் 4.0 லிட்டர் கொண்ட ட்வின் டர்போ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. GT  மாடல்  576 Bhp  திறனையும் 630 Nm  இழுவைத்திறனையும் கொண்டது. இந்த திறன் 7 ஸ்பீட் கொண்ட டியூவல் கிளட்ச் மூலம் பின்புற வீலுக்கு வழங்கப்படும். GT மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.0 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. மேலும் இதன் மேற்கூரையை மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் போதும் வெறும் 11 வினாடிகளுக்குள் திறந்து மூடிக்கொள்ளலாம். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.