ரூ. 48.6 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மெர்சிடிஸ் பென்ஸ் E - கிளாஸ் 'எடிசன் E'

மெர்சிடிஸ்  பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் 20 ஆண்டுகளாக E - கிளாஸ் மாடல் விற்கப்படுவதை கொண்டாடும் விதமாக E - கிளாஸ் 'எடிசன்  E'  எனும் சிறப்பு பதிப்பு மாடலை ரூ. 48.6 லட்சம் புனே ஷோரூம்  ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது.

பழைய   E - கிளாஸ் மாடலுக்கும் இந்த மாடலுக்கும் தோற்றத்தில் ஏதும் பெரிய  மாற்றம் இல்லை. சிற ஒப்பனை மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளது. சன் ரூப் மற்றும் புதிய வீல்களும்  கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பின்புறத்தில்   'எடிசன்  E' எனும் பேட்ச் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் E200, E250 CDI மற்றும்  E350 CDI எனும் மூன்று வேரியண்டுகளில் கிடைக்கும். என்ஜினில் எந்த மாற்றமும் இல்ல அதே மூன்று எஞ்சினிலேயே கிடைக்கிறது. 

E200 மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் கிடைக்கும். இது 184 Bhp  திறனையும் 300 Nm  இழுவைதிறனையும் வழங்கும். E250 CDI மாடல் 2.2 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கும். இது 204 Bhp  திறனையும் 500 Nm  இழுவைதிறனையும் வழங்கும் மற்றும் E350 CDI மாடல் 3.0 லிட்டர் V6 டீசல் என்ஜினில் கிடைக்கும். இது 265 Bhp  திறனையும் 620 Nm  இழுவைதிறனையும் வழங்கும். அணைத்து மாடல்களும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ் மிசனில் மட்டும் கிடைக்கும். 

வேரியன்ட் வாரியாக இதன் விலை விவரம் : 
E200 Edition E- Rs 48.60 லட்சம் 
E250 CDI Edition E- Rs 50.76 லட்சம்
E350 CDI Edition E- Rs 60.61 லட்சம்

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.