வெளிப்படுத்தப்பட்டது மெர்சிடிஸ் பென்ஸ் மேபக் விஷன் 6 கேப்ரியோலெட்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மேபக் விஷன் 6 கான்செப்ட் கேப்ரியோலெட் மாடலை பெப்பல் பீச்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  வெளியிட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த மாடலை கிளாசிக் மேபக் ஏரோ கூப் மாடலின் அடிப்படையில் வடிவமைத்துள்ளது. இந்த மாடல் 5700 மிமீ நீளம் கொண்டது.

இந்த மாடல் ஒரு முழுமையான எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். ஒவ்வொரு சக்கரத்திலும் ஒரு மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இணைந்து மொத்தம் 748 Bhp திறனை வழங்கும். மேலும் இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4 வினாடிகளுக்குள் கடந்துவிடும் மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

இந்த மாடல் ஏராளமான பல எதிர்கால மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் தொடர்பான விவரங்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.