ரூ. 1.21 கோடி விலையில் வெளியிடப்பட்டது மெர்சிடிஸ் பென்ஸ் S கிளாஸ் கோனோய்ஸ்ர் எடிசன்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்  S கிளாஸ் சீரீஸில்  கோனோய்ஸ்ர் எடிசன் எனும் சிறப்பு பதிப்பு மாடலை வெளியிட்டுள்ளது. இந்த மாடலின் S 350 D வேரியன்ட் ரூ. 1.21 கோடி புனே ஷோரூம்  விலையிலும் S 400 வேரியன்ட் ரூ. 1.32 கோடி புனே ஷோரூம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது. பெயரிற்கு ஏற்றார் போலவே இந்த மாடலில் அதிக சொகுசாய் வழங்கும் உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலின் S 350 D வேரியண்டில் 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 262 Bhp திறனையும் 620 Nm இழுவைத்திறனையும் வழங்கும். மற்றும் S 400 வேரியண்டில் 3.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின்   பொருத்தப்பட்டுள்ளது. இது 338 Bhp திறனையும் 480 Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த இரண்டு மாடல்களிலுமே 7G ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் டீசல் மாடல் 6.8 வினாடிகளில் பெட்ரோல் மாடல் 6.1 வினாடிகளில் 100  கிலோமீட்டர் வேகத்தை கடக்கும். இந்த இரண்டு மாடலும் அதிகபட்சமாக மணிக்கு 250  கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

இதன் பின்புற இருக்கை மிகவும் சொகுசான அனுபவத்தை வழங்குமாறும் அதிக இடவசதியுடனும் மற்றும் எலெக்ட்ரானிக் புட் ரெஸ்ட்டுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இருக்கையை 43  டிகிரி வரை சாய்க்க முடியும். மேலும் இந்த மாடலில் ஏர் பேலன்ஸ் எனும் சிஸ்டமும் நைட் அசிஸ்ட் எனும்  சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நைட் அசிஸ்ட் எனும் தொழில்நுட்பம் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும் போது தெளிவாக சாலையை பார்க்க உதவும். இந்த மாடல் ஜாகுவார் XJ , ஆடி A8, BMW  7 சீரீஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.