மார்ச் 29 அன்று வெளியிடப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் S400

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மார்ச் 29 ஆம்  தேதி அன்று தனது S - கிளாஸ் ரேஞ்சில் புதிய S400 மாடலை வெளியிட இருக்கிறது. இந்த S400 மாடல் பதிய பெட்ரோல் எஞ்சின் கொண்ட S - கிளாஸ் வெர்சன் ஆகும். ஏற்கனவே S - கிளாஸ் ரேஞ்சில்  350D மற்றும் S500 மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

மற்ற S - கிளாஸ் மாடல்களுக்கும் இதற்கும் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. புதிய 3.0 லிட்டர் V6 டர்போ என்ஜின் மட்டும் பொருத்தப்பட்டுள்ளது. இது 330 bhp திறனும் 480 Nm இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடலில் 9 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது பின்புற வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. 
 

இந்த புதிய S400 மாடல் 350D மற்றும் S500 மாடல்களுக்கு இடையிலான விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.