மேம்படுத்தப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் AMG GT மாடல்கள் வெளிப்படுத்தப்பட்டது

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் GT-C கூப் மாடலை  வெளிப்படுத்தியுள்ளது. மேலும் மேம்படுத்தப்பட்ட GT மற்றும் GT-S மாடல்களையும் வெளிப்படுத்தியுள்ளது. GT-C கூப் என்பது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் GT-C ரொட்ஸ்டெர் மாடலின் மூடிய மேற்க்கூரை மாடல் ஆகும்.

இந்த மாடலில் 4.0 லிட்டர் கொண்ட ட்வின் டர்போ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது  557 Bhp  திறனையும் 680 Nm  இழுவைத்திறனையும் கொண்டது. இந்த திறன் 7 ஸ்பீட் கொண்ட டியூவல் கிளட்ச் மூலம் பின்புற வீலுக்கு வழங்கப்படும். GT-C மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.7 வினாடிகளில்  கடக்கும் வல்லமை கொண்டது மேலும் அதிகபட்சமாக மணிக்கு 317 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். மேலும் GT மற்றும் GT-S மாடல்களின் செயல்திறனும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் ஆரம்பத்தில் வெறும் 50 எண்ணிக்கையில் சிறப்பு பாதிப்பு மாடலாக மட்டுமே கிடைக்கும். AMG மாடல்களின் 50 வது ஆண்டு விழா நினைவாக இந்த மாடல் வெளியிடப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ்  நிறுவனம் தற்போது GT குடும்பத்தில் AMG GT (476PS), GT S (522PS), GT C (557PS), GT R (585PS), GT Roadster (476PS) மற்றும் GT C Roadster (557PS) என ஆறு மாடல்கள் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.