வெளிப்படுத்தப்பட்டது மெர்சிடிஸ் பென்ஸ் GLC கூப்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் GLC  SUV  மாடலின் அடிப்படையிலான   GLC கூப்   மாடலை வெளிப்படுத்தியது. GLC  SUV  மாடலை அடிப்படையாக கொண்டு இந்த GLC  கூப் மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உட்புறத்தில் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை GLC  SUV  மாடலின் உட்புறம் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் மட்டும் கூப் போன்ற தோற்றத்தை தருவதற்காக பின்புற கூரை சரிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புற தோற்றம் SUV  மாடலை விட சிறப்பாகவே உள்ளது.

இந்த மாடலும் SUV  மாடலை போலவே பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் பல வித திறன்களில் கிடைக்கும். இதன் டாப் வேரியண்டில் AMG  பாடி கிட், 20 இன்ச் அலாய் வீல் மற்றும் இரட்டை வண்ண  பெயிண்ட் ஆகியவை கிடைக்கும். மேலும் இந்த மாடலிலும்  9G-tronic  ஆட்டோமேடிக் கியர் பாக்ஸும் 4MATIC எனும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.