வெளிப்படுத்தப்பட்டது மெர்சிடிஸ் பென்ஸ் AMG GT-R

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இங்கிலாந்தில் நடைபெற்ற குட்வுட்  பெஸ்டிவல் ஆப் ஸ்பீட் எனும் நிகழ்ச்சியில் AMG GT-R மாடலை வெளிப்படுத்தியுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ்  நிறுவனம் ஏற்கனவே GT குடும்பத்தில் GT, GT-S கூப் மற்றும் GT3 ரேஸ் மாடல் என மூன்று மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

AMG GT-R மாடல் GT குடும்பத்தில் உள்ள மற்ற மாடல்களை விட அதிக திறன் கொண்டது. இந்த மாடலில் 4.0 லிட்டர் கொண்ட ட்வின் டர்போ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 585 Bhp  திறனையும் 700 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். இந்த திறன் 7 ஸ்பீட் கொண்ட டியூவல் கிளட்ச் மூலம் பின்புற வீலுக்கு வழங்கப்படும். இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.6 வினாடிகளிலும்  அதிகபடச்சமாக  மணிக்கு 318 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது.

AMG GT-R மாடல்  GT-S மாடலைவிட சிறந்த செயல்திறன், ஏரோ டைனமிக் மற்றும் சிறந்த சஸ்பென்ஷன் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வருட இறுதியில் ஐரோப்பாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.