மெர்சிடிஸ் பென்ஸ் மேபக் G650 லேன்டலெட் மாடலின் படங்கள்

மெர்சிடிஸ் நிறுவனம் G-வேகன் மாடலை மேபக் பிராண்டில் G650 லேன்டலெட் எனும் பெயரில் வெளியிட உள்ளது. சொகுசு மற்றும் அட்வென்ச்சர் என இரண்டும் கலந்து இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த  மாடலில் 6.0 லிட்டர் V12 ட்வின் டர்போ சார்ஜ் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 621 Bhp  திறனையும் 1000 Nm  இழுவைதிறனையும் வழங்கும். இதன் திறன் 7 ஸ்பீட் 7G-ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது. மேலும் இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் கொண்டுள்ளது.

இந்த மாடல் வெறும் 99 என்ற எண்ணிக்கையில் மட்டுமே சிறப்பு பதிப்பாக தயாரிக்கப்பட உள்ளது. மேலும் இந்த மாடல் பின்புற இருக்கைக்கு மட்டும் திறந்த மேற்கூரை கொண்டது. இதை எலெக்ட்ரிக்கல் சிஸ்டம் மூலம் கட்டுப்படுத்த முடியும். இந்த மாடல் 2017 ஆம் ஆண்டு ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் வெளியிடப்பட உள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.