செப்டம்பர் 25 வெளியிடப்படும் மெர்சிடிஸ் மேபக் S 600

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் மேபக் S 600 மாடலை செப்டம்பர் 25 அன்று வெளியிட இருக்கிறது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் 2015 ஆம் ஆண்டு முடிவுக்குள் 15 மாடல்களை வெளியிடுவதாக இருந்தது. ஏற்கனவே 10 மாடல்களை இந்த வருடத்தில் மட்டும் வெளியிட்ட நிலையில் மேலும் ஒரு மாடலை வெளியிட இருக்கிறது. 

இந்த மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விலை உயர்ந்த சொகுசு கார்களில் ஒன்று. இந்த மாடலில் 6.0 லிட்டர் V  12 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 515 bhp திறனும் 830 Nm இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5 வினாடிகளுக்குள் கடக்கும் வல்லமை கொண்டது. இந்த மாடலில் 9 ஸ்பீட் கொண்ட 9 G - ட்ரானிக்ஸ் ட்ரான்ஸ்மிசன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடல் 2.75 கோடி விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.