ரூ. 67.28 லட்சம் விலையில் மீண்டும் இந்தியா வருகிறது மிட்சுபிஷி மான்டிரோ SUV

மிட்சுபிஷி நிறுவனம் மீண்டும் இந்தியாவில் மான்டிரோ SUV  மாடலை ரூ. 67.28 லட்சம் மஹாராஷ்டிரா ஷோரூம்  விலையில் வெளியிட்டுள்ளது. இதன் முன்பதிவு அனைத்து மிட்சுபிஷி ஷோரூம்களிலும் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த மாடல் பழமையான SUV  வடிவமைப்பின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ஒரு முழுமையான SUV. இந்த மாடலில் பெரிய முகப்பு குரோம் கிரில், பெரிய வீல் ஆர்ச், ஆறு காற்றுப்பை, ABS, EBD, டச் ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டம், தானியங்கி வைப்பர், தானியங்கி குளிரூட்டி, பகல் நேரத்தில் ஒளிரும் LED, ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, குரூஸ் கண்ட்ரோல், சன்ரூப்  என சகல வசதிகளும் கிடைக்கும். மேலும் இந்த மாடலில் எழு பேர் வரை தாராளமாக அமர முடியும். 

இந்த மாடலில் 3.2 லிட்டர் கொண்ட டர்போ சார்ஜ் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 189 BHp  திறனையும் 441 Nm  இழுவைதிறனையும் வழங்கும். இந்த திறன்  ஐந்து ஸ்பீட் கொண்ட ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலம் டயர்களுக்கு கடத்தப்படுகிறது. இந்த மாடல் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது பிறகு 2014 ஆம் ஆண்டு இதன் விற்பனை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.