மிட்சுபிஷி அவுட்லேண்டர் மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது

மிட்சுபிஷி நிறுவனம் அவுட்லேண்டர் மாடலின் முன்பதிவை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. ரூ 5 லட்சம் முன்பணமாக செலுத்தி இந்த மாடலை அணைத்து ஷோரூம்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். அவுட்லேண்டர் மாடல் 2012 ஆம் ஆண்டு இந்தியாவில் விற்பனை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய மூன்றாம் தலைமுறை மிட்சுபிஷி அவுட்லேண்டர் மாடல் 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த மாடல் 2.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் மட்டுமே கிடைக்கும். இந்த எஞ்சின் 165Bhp திறனையும் 222Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் CVT கியர் பாக்ஸ் சிஸ்டமும் டார்க் ஆன் டிமாண்ட் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் கிளைமேட் கண்ட்ரோல், டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், லெதர் சீட் என அணைத்து வசதிகளுடன் கூடிய ஒரே ஒரு வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். 

இந்த மாடல் தோராயமாக ரூ 25 லட்சம் விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் ஹூண்டாய் டூஷன், வோல்க்ஸ் வேகன் டைகுன் மற்றும் ஹோண்டா CR-V போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.