மிட்சுபிஷி பஜிரோ ஸ்போர்ட் மாடலின் புதிய வேரியன்ட் வெளியிடப்பட்டது

மிட்சுபிஷி நிறுவனம் பஜிரோ ஸ்போர்ட் மாடலின் புதிய செலக்ட் பிளஸ் வேரியண்ட்டை வெளியிட்டுள்ளது. இதன் மேனுவல் மாடல் ரூ 29.28 லட்சம் டெல்லி ஷோரூம் விலையிலும் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் ரூ 28.88 லட்சம் டெல்லி ஷோரூம் விலையிலும்  வெளியிடப்பட்டுள்ளது.  இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் சில புதிய உபகரணங்களும் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த செலக்ட் பிளஸ் வேரியண்டில் புதிய இரட்டை வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. இது சிவப்பு ,  வெள்ளை ,  மஞ்சள் மற்றும் சில்வர் என நான்கு வண்ணங்களில் கிடைக்கும். மேலும் முன்புறத்தில் புதிய கருப்பு வண்ண க்ரில், பம்பர், கருப்பு வண்ண வீல் ஆர்ச், கருப்பு வண்ண அலாய் வீல், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள்,  கைப்பிடி மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகளில் குரோம் அலங்காரம் ஆகியவையும் உட்புறத்தில் குரூஸ் கண்ட்ரோல் , சில்லர் பாக்ஸ் , DVD பிளேயர் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் அதே 2.5 லிட்டர் டீசல் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது 178Bhp திறனையும் 350Nm (AT) / 400Nm (MT) இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் ஐந்து ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் கிடைக்கும். மேலும் இதன் மேனுவல் மாடல் மட்டும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் கிடைக்கும். இந்த மாடல் 215 மில்லிமீட்டர் தரை இடைவெளி கொண்டது. புதிய தலைமுறை டொயோடா பார்ச்சுனர் மற்றும் போர்டு எண்டவர் மாடல்களின் போட்டியை சமாளிக்க மிட்சுபிஷி நிறுவனம் இந்த மாடலை வெளியிட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.