எரிபொருள் திறன் சோதனை செய்வது குறித்த பிரச்சனையில் சிக்குகிறது மிட்சுபிஷி

ஜப்பானை  சேர்ந்த மிட்சுபிஷி நிறுவனம் எரிபொருள் திறன் சோதனை செய்வது குறித்த மிகப்பெரிய பிரச்சினையில் சிக்கியுள்ளது. ஜப்பான் அரசு நிர்ணயித்துள்ள சில விதி முறைகளுக்கு உட்படாமல் இந்த எரிபொருள் திறன் சோதனை செய்யப்பட்டுள்ளதால் உண்மையான அளவை விட சற்று அதிகமான அளவை தெரிவித்துள்ளது. இதனால் மிகப்பெரிய ஒரு தொகையை அபராதமாக மிட்சுபிஷி நிறுவனம் செலுத்தவேண்டி இருக்கும்.

மிட்சுபிஷி நிறுவனம் டேஸ் மற்றும் டேஸ் ரூக்ஸ் என இரண்டு மாடல்களை நிசான் நிறுவனத்திற்கு சப்பளை செய்து வருகிறது. இதனை நிசான் நிறுவனம் தனது ஆலையில் சோதனை செய்யும் போது குறிப்பிட்ட அளவு வராததால் இந்த பிரச்சனை தொடங்கியுள்ளது. 

சில நாட்களுக்கு முன்பு தான் வோல்க்ஸ் வேகன் நிறுவனம் மாசுக்கட்டுப்பாடு தொடர்பான பிரச்சனையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.மிகப்பெரிய மற்றும் மரியாதைக்குரிய  நிறுவனங்கள் இது போன்ற பிரச்சனைகளை செய்வது வருந்தத்தக்க நிகழ்வு.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.