மிட்சுபிஷி கிரௌண்ட் டூரர் கான்செப்ட் மாடலின் டீசர் படம் வெளியிடப்பட்டது

மிட்சுபிஷி நிறுவனம் கிரௌண்ட் டூரர் கான்செப்ட்  மாடலின்  டீசர் படத்தை வெளியிட்டுள்ளது. இந்த மாடல் 2016 ஆம் ஆண்டு பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த மாடல் ஒரு ஹைபிரிட் SUV  மாடல் எனவும் மிட்சுபிஷி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

டீசர் படம் இது ஒரு பெரிய SUV  போன்ற தோற்றத்தை தருகிறது. இந்த மாடல் தொடர்பான விவரங்கள் அதிகம் வெளியிடப்படவில்லை. 2016 ஆம் ஆண்டு பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் இதன் விவரங்களை அதிகம் எதிர்பார்க்கலாம். இந்த மாடல் மிட்சுபிஷி நிறுவனத்தின் விலை அதிகம் கொண்ட மாடலாக நிலைநிறுத்தப்படும். 

இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படுமா என்பது தெரியவில்லை. மிட்சுபிஷி நிறுவனம் இந்தியாவில் பஜிரோ ஸ்போர்ட் மற்றும் மாண்டிரோ மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் தற்போது SUV மாடல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.