ரூ 12.99 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது அதிக திறன் கொண்ட புதிய ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம்

ஃபோர்ஸ் நிறுவனம் அதிக திறன் கொண்ட புதிய குர்கா எக்ஸ்ட்ரீம் மாடலை ரூ 12.99 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் RFC ஆப்ரோடு போட்டியில் வெற்றி பெற்ற குர்கா மாடலை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் புதிய எஞ்சின் மற்றும் சில மேம்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் மெர்சிடிஸ் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட புதிய 2.2-லிட்டர் OM611  எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 140Bhp திறனையும் 321Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் 5 ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலின் சஸ்பென்ஷன் அமைப்பு மற்றும் ஸ்டீரிங்  அமைப்பு ஆகியவையும் மேம்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் இந்த மாடலின் வெளிப்புறத்திலும் சில ஒப்பனை மாற்றங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் மற்ற குர்கா மாடலை விட சிறப்பான ஆப்ரோடு செயல்திறனை வழங்கும். இந்த மாடல் மூன்று கதவு கொண்ட தேர்வில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.