ரூ.6.95 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது அதிக திறன் கொண்ட மஹிந்திரா பொலேரோ பவர் பிளஸ்

மஹிந்திரா நிறுவனம் அதிக திறன், அதிக மைலேஜ் மற்றும் நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட புதிய பொலேரோ பவர் பிளஸ் SUV  மாடலை  ரூ.6.95 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் 13 சதவீதம் அதிக திறனும் 5 சதவீதம் அதிக மைலேஜும் கொண்டது. மேலும் இந்த மாடல் SLE, SLX மற்றும்  ZLX என மூன்று வேரியண்டுகளில் கிடைக்கும்.

வெளிப்புற மற்றும் உட்புற தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. நீளத்தை குறைப்பதற்காக முன்புற மற்றும் பின்புற பம்பர்களில் மட்டும் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் புதிய 1.5 லிட்டர் mHawkD70 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 70.3 Bhp  திறனையும் 195 Nm  இழுவைத்திறனையும்  வழங்கும். மேலும் இந்த மாடல் 16.5 Kmpl  மைலேஜ் தரும் என அரை சான்றளித்துள்ளது.

இந்த மாடலில் கூடுதலாக மஹிந்திரா நிறுவனத்தின் மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பமும் என்ஜின் இம்மொபிலைசரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் வெள்ளை, பீஜ், பிரவுன் மற்றும் சில்வர் என நான்கு வண்ணங்களில் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.