2016 டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் மாருதி சுசுகி இக்னிஸ்

மாருதி சுசுகி நிறுவனம் இக்னிஸ் மாடலை  2016 டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிக்கு வைக்கிறது. இந்த மாடல் டோக்யோ மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பலேனோ மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாடல் ஆகும். மேலும் இது ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் im 4 என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த மாடல் 4 மீட்டருக்கு குறைவான ஒரு கிராஸ் ஓவர் மாடல் ஆகும். இந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 90 bhp திறனையும் 118 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் CVT கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடல் மாருதி பலேனோ மற்றும் S கிராஸ் மாடல்களிக்கு இடையிலான விளையி நிலைநிறுத்தப்படும். மேலும் 6 முதல் 9 லட்சம் விலை கொண்டதாக இருக்கும். இது மகிந்திரா KUV 100 மாடலுக்கு போட்டியாக இருக்கும். 

மேலும் விட்டாரா ப்ரீஸா, மேம்படுத்தப்பட்ட சியாஸ் போன்ற மாடல்களும் காட்சிப்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.