இந்தியாவில் வெளியிடப்பட்டது 2018 ஆம் ஆண்டு மினி கூப்பர் மாடல்கள்

மினி இந்தியா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டு மினி கூப்பர் மாடல்களை ரூ 29.7 லட்சம் ஷோரூம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் மொத்தம் நான்கு வேரியன்ட்டுகளில் இந்தியாவில் கிடைக்கும். இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மினி நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு 2018 ஆம் ஆண்டு மினி கன்ட்ரிமென் மாடலை இந்தியாவில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

வேரியன்ட் வாரியாக ஷோரூம் விலை விவரம்:

  • MINI 3-door Cooper D (Diesel) - ரூ 29.7 லட்சம்
  • MINI 3-door Cooper S (Petrol) - ரூ 33.2 லட்சம்
  • MINI 5-door Cooper D (Diesel) - ரூ 35 லட்சம்
  • MINI Convertible Cooper S (Petrol) - ரூ 37.10 லட்சம்

புதிய 2018 ஆம் ஆண்டு மினி கூப்பர் மாடலில் பியானோ கருப்பு வண்ண பினிஷ் கொண்ட முகப்பு விளக்குகள், பின்புற விளக்குகள் மற்றும் முன்புற கிரில் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் மினி நிறுவனத்தின் புதிய லோகோ புதிய LED பின்புற விளக்குகள் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் உட்புறம் பியானோ கருப்பு வண்ணத்தில் சில ஒப்பனை மாற்றங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் உட்புறத்தில் LED ஆம்பியண்ட் விளக்குகள், 6.5 இன்ச் அல்லது 8.8 இன்ச் வட்ட டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் கூடுதலாக க்ரே, ப்ளூ மற்றும் ஆரஞ்சு வண்ண தேர்வுகளில் கிடைக்கும். 

இந்த மாடல்கள் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்களில் கிடைக்கும். இதன் பெட்ரோல் எஞ்சின் 189bhp திறனையும் 280Nm இழுவைத்திறனையும் வழங்கும். இதன் பெட்ரோல் எஞ்சினில் ஏழு ஸ்பீட் டியூவல் கிளட்ச் ட்ரான்ஸ்மிஷன் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பெட்ரோல் எஞ்சின் மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை 6.7 வினாடிகளிலும் மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 235 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. இதன் டீசல் எஞ்சின் 112bhp திறனையும் 270Nm இழுவைத்திறனையும் வழங்கும். இதன் டீசல் எஞ்சினில் ஆறு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டீசல் எஞ்சின் மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை 9.2 வினாடிகளிலும் மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 205 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.