367 Bhp திறன் கொண்ட போல்ஸ்டார் S60 மற்றும் V60 மாடல்களை வெளியிட்டது வால்வோ

சொகுசு கார் நிறுவனமான வால்வோ தனது அதிக செயல்திறன் கொண்ட கார்களை  போல்ஸ்டார்  பிராண்டில் விற்பனை செய்து வருகிறது. அதன்படி 367 Bhp  திறன் கொண்ட S60 செடான் மற்றும் V60 எஸ்டேட் மாடல்களை வெளியிட்டது வால்வோ.

இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.7 வினாடிகளில் கடக்கும் மேலும் அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது. இந்த மாடல்களில் பல விருதுகளை வென்ற வால்வோ நிறுவனத்தின் 4 சிலிண்டெர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

S60 மற்றும் V60 மாடலில் உள்ள அதே என்ஜினை எடுத்து பெரிய டர்போ சார்ஜெர், புதிய சூப்பர் சார்ஜெர், புதிய கேம் சாப்ட், பெரிய ஏர் இண்டேக், பெரிய பம்ப் ஆகியவற்றை பொருத்தி அதிக செயல்திறனை வழங்கும் அளவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் 8 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேடிக் கியர் பாக்ஸும் பொருத்தப்பட்டுள்ளது.

சிறந்த செயல்திறனை வழங்குவதற்காக இந்த கார்களின் எடையையும் குறைத்துள்ளது வால்வோ நிறுவனம். 24 கிலோ கிராம் வரை இதன் எடை குறைக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.