ரூ 7.44 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய தலைமுறை 2018 மாருதி சுசூகி எர்டிகா

மாருதி சுசூகி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை 2018 ஆம் ஆண்டு எர்டிகா மாடலை ரூ 7.44 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் நெக்ஸா ஷோரூம் வாயிலாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் மாருதியின் சாதாரண ஷோரூம் வாயிலாகவே வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடல் புதிய 1.5 லிட்டர் K15 பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் வெளியிடப்பட்டுள்ளது. 

வேரியன்ட் வாரியாக சென்னை ஷோரூம் விலை விவரம்:
பெட்ரோல்
Lxi - ரூ 7.44 லட்சம்
Vxi - ரூ 8.16 லட்சம்
Zxi - ரூ 8.99 லட்சம்
Zxi+ - ரூ 9.50 லட்சம்
Vxi AT - ரூ 9.18 லட்சம்
Zxi AT - ரூ 9.95 லட்சம்

டீசல் 
Ldi - ரூ 8.84 லட்சம்
Vdi - ரூ 9.56 லட்சம்
Zdi - ரூ 10.39 லட்சம்
Zdi+ - ரூ 10.90 லட்சம்

இந்த மாடல் டிசைர், இக்னிஸ், பலேனோ மற்றும் ஸ்விப்ட் மாடல்கள் தயாரிக்கப்பட்ட அதே ஹார்ட்டெக் பிளாட்பார்மில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பு மற்றும் வசதிகள் என இந்த மாடல் ஏராளமான மாற்றங்களை பெற்றுள்ளது. மேலும் இந்த மாடல் முந்தய மாடலை விட சற்று பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய க்ரில், புதிய பம்பர், புதிய பக்கவாட்டு வடிவமைப்பு, முகப்பு விளக்குகள், புதிய அலாய், புதிய பின்புற விளக்குகள், பின்புற வடிவமைப்பு என முற்றிலும் ஒரு புதிய மாடல் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் உட்புற வடிவமைப்பும் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீரிங் வீல் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் புதிய பிளாட்பாரம், புதிய உட்புற மற்றும் வெளிப்புற வடிவமைப்பு என முழுவதும் ஒரு புதிய மாடல் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் புதிய 1.5 லிட்டர் K15 பெட்ரோல் எஞ்சின் மற்றும் முந்தய 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் 103BHP (6000 RPM) திறனும் 138NM (4400RPM) டார்க் எனும் இழுவைதிறனும் டீசல் என்ஜின் 90BHP (4000 RPM) திறனும் 200NM (1750RPM) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த இரண்டு மாடலும் ஐந்து ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்விலும், பெட்ரோல் எஞ்சின் கூடுதலாக நான்கு ஸ்பீட் AMT டிரான்ஸ்மிஷன் தேர்விலும் கிடைக்கும். இதன் டீசல் எஞ்சின் மாடல் 25.47kmpl மைலேஜும், மேனுவல் பெட்ரோல் மாடல் 19.34kmpl மைலேஜும் மற்றும் AT பெட்ரோல் மாடல் 18.69kmpl மைலேஜும் வழங்கும் என ARAI சான்றளித்துள்ளது. 

திய தலைமுறை 2018 மாருதி சுசூகி எர்டிகா மாடல் ஹோண்டா BR-V, ரெனோ லாட்ஜி, மஹிந்திரா மராசோ மற்றும் TUV300 பிளஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.