4.39 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட புதிய ஃபோர்டு - ஃபிகோ

ஃபோர்டு - ஃபிகோ ஆஸ்பயர் காம்பேக்ட் செடென் மாடலின்  வெற்றியை  தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட ஃபிகோ இன்று இந்தியாவில் 4.39 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிட்டது ஃபோர்டு நிறுவனம். இது பழைய ஃபிகோ மாடலுக்கு மாற்றாக இருக்கும் மேலும்  பழைய ஃபிகோ மாடல் விற்பனை நிறுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல் ஃபோர்டு - ஃபிகோ ஆஸ்பயர் காம்பேக்ட் செடென் மாடலின் ஹேட்ச்பேக் மாடல் என்பதால் ஃபிகோ ஆஸ்பயர் காருக்கும் இதுக்கும் பெரிய வேறுபாடு இருக்காது. இந்த மாடலும் ஃபிகோ ஆஸ்பயர் போலவே 1.2 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர்  பெட்ரோல்  என்ஜின், மற்றும்  1.5 லிட்டர் டீசல்  என்ஜின் என மூன்று என்ஜினில் கிடைக்கும்.  இதன் 1.5 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசனில் மட்டும் கிடைக்கும். 

இந்த மாடல் ஹோண்டா - ப்ரியோ, டாடா - போல்ட் மற்றும் மாருதி சுசுகி - ஸ்விப்ட் மாடலுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும். மேலும் இந்த மாடலின் வேரியன்ட் வாரியாக  அனைத்து விவரங்களையும் மற்றும் ஆன் ரோடு விலையையும் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

http://www.mowval.com/car-overview.php?car_company=19&car_model=113

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.