ரூ.18.99 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் டூஷன் SUV

ஹூண்டாய் நிறுவனம் டூஷன் SUV மாடலை ரூ.18.99 லட்சம் டெல்லி ஷோ ரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் மொத்தம் 5 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. ஹூண்டாய் நிறுவனம் டூஷன் SUV  மாடலை இந்த வருடம் டெல்லியில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

வேரியன்ட் வாரியாக இதன் டெல்லி ஷோரூம் விலை விவரம்: 
பெட்ரோல் 
2WD MT - ரூ 18.99 லட்சம்
2WD AT GL - ரூ 21.79 லட்சம் 
டீசல் 
2WD MT - ரூ 21.59 லட்சம்
2WD AT GL - ரூ 23.48 லட்சம்
2WD AT GLS - ரூ 24.99 லட்சம்

இந்த மாடல் ஹூண்டாய் நிறுவனத்தின் புளூயிடிக் டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  வெளிப்புறத்தில் இது ஒரு முழுமையான SUV  போன்ற தோற்றத்தை தருகிறது. உட்புறத்தில் புதிய எலென்றா  மாடலின் வடிவங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் 2.0 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜினில் கிடைக்கும். இதன் டீசல் என்ஜின் 185 Bhp  திறனையும்  400 நம் இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இதன் பெட்ரோல் என்ஜின் 152 Bhp  திறனையும் 192 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். இதன் இரண்டு எஞ்சினுமே 6 ஸ்பீட் கொண்ட மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸமிஷனில் கிடைக்கும்.

இதன் ARAI  மைலேஜ் விவரம்: 
பெட்ரோல் மேனுவல் - 13.03kmpl
பெட்ரோல் ஆட்டோமேட்டிக் - 12.95kmpl
டீசல் மேனுவல் - 18.42kmpl
டீசல் ஆட்டோமேட்டிக் - 16.38kmpl

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.