ரூ. 7.42 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மகிந்திரா நுவோஸ்போர்ட் காம்பேக்ட் SUV

மகிந்திரா நிறுவனம் ரூ. 7.42 லட்சம் டெல்லி  ஷோ ரூம் ஆரம்ப விலையில்  புதிய நுவோஸ்போர்ட் காம்பேக்ட் SUV மாடலை வெளியிட்டுள்ளது. இந்த மாடல் குவாண்டோ மாடலுக்கு மாற்றாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்த மாடலின் முன்புறம் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது ஆனால் பின்புறம் குவாண்டோ போன்ற தோற்றத்தையே தருகிறது. இந்த மாடல் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால் குவாண்டோ மாடலை விட எடை குறைவானதாக இருக்கும். இந்த மாடலின் ஸ்போர்டியான தோற்றத்திற்காக இந்த பெயரை சூட்டியுள்ளதாக மகிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மாடலிலும் குவாண்டோ மாடலில் உள்ள  அதே 1.5 லிட்டர் mHawk  என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது 100 bhp (3750 rpm) திறனும் 240Nm (1600-2800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் கூடுதலாக தற்போது ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனிலும் கிடைக்கும். உட்புறத்திலும் பெரிய மாற்றங்கள் இல்லை. இந்த மாடல் சிவப்பு, ஆரஞ்சு, ப்ளூ, வெள்ளை, கருப்பு  மற்றும் சில்வர் என 6 வண்ணங்களில் கிடைக்கும்.

இந்த மாடல் மாருதி சுசுகி விட்டாரா ப்ரீஸா, போர்டு ஈகோஸ்போர்ட் மற்றும் மகிந்திரா TUV300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். நான்கு மீட்டருக்கும் குறைவான நீளத்தில் மட்டும் மூன்று மாடல்களை விற்பனை செய்து வருகிறது மகிந்திரா நிறுவனம்.

வேரியன்ட் வாரியாக டெல்லி ஷோரூம்  விலை விவரம்
N4 - ரூ.742000
N4 +  - ரூ.772000
N6 - ரூ.845000
N6 AMT - ரூ.910000
N8 - ரூ.922000
N8 AMT - ரூ.987000

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.