புதிய மெர்சிடிஸ் பென்ஸ் A கிளாஸ் 24.95 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது

புதிய மேம்படுத்தப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் A கிளாஸ் 24.95 லட்சம் மும்பை ஷோரூம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் 2015 ஆம் ஆண்டு முடிவுக்குள் 15 மாடல்களை வெளியிடுவதாக இருந்தது. அதன் படி அதன் 15 வது மாடலையும் வெளியிட்டது. மெர்சிடிஸ் பென்ஸ் A கிளாஸ் ஹேட்ச்பேக் மாடல் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தற்போது அதன் மேம்படுத்தப்பட்ட மாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடலில் சில ஒப்பனை மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளது குறிப்பாக LED முகப்பு விளக்குகள், பின்புற விளக்குகள் மற்றும் முன்புற பம்பர் ஆகியவற்றை கூறலாம்.

இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதங்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் 24.95 லட்சம் மும்பை ஷோரூம் விலையிலும் டீசல் மாடல் 25.95 லட்சம் மும்பை ஷோரூம் விலையிலும் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் 1.6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 122 Bhp திறனையும் 200 Nm இழுவைதிறனையும் மற்றும் 15.5 கிலோமீட்டர் மைலேஜையும் வழங்கும். டீசல்  மாடலில் 2.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 134 Bhp திறனையும் 300 Nm இழுவைதிறனையும் மற்றும் 20 கிலோமீட்டர் மைலேஜையும் வழங்கும். 

மெர்சிடிஸ் பென்ஸ் மாடல்களில் உள்ள அணைத்து சிறப்புகளும் வசதிகளும் இதிலும் உள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.