ரூபாய் 58.9 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட மெர்செடெஸ் பென்ஸ் GLE

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் ரூபாய் 58.9 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் மேம்படுத்தப்பட்ட மெர்செடெஸ் பென்ஸ் GLE வெளியிடப்பட்டது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் 2015 ஆம் ஆண்டு முடிவுக்குள் 15 மாடல்களை வெளியிடுவதாக இருந்தது. ஏற்கனவே 11 மாடல்களை இந்த வருடத்தில் மட்டும் வெளியிட்ட நிலையில் மேலும் ஒரு இன்று மாடலை வெளியிட்டு  இருக்கிறது.

இந்த மாடலில் புதிய முகப்பு விளக்குகள், புதிய முன்புற கிரில் மற்றும் பகல் நேரத்தில் ஒளிரும்  LED விளக்குகள் ஆகியவை புதிதாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாடல் 250 d மற்றும் 350 d என இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கும். 250 d வேரியன்ட் 58.9 லட்சம் டெல்லி ஷோரூம் விலையிலும் 350 d வேரியன்ட் 69.9 லட்சம் டெல்லி ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

250 d வேரியன்ட் 204 bhp திறனும் 500 Nm  இழுவைதிறனும் கொண்ட என்ஜினிலும்,  350 d வேரியன்ட் 258 bhp திறனும் 620 Nm  இழுவைதிறனும் கொண்ட என்ஜினிலும் கிடைக்கும். மேலும் இந்த மாடலில் புதிய  9 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.