வெலர் எனும் புதிய மாடலை வெளிப்படுத்தியது லேண்ட் ரோவர்

டாடா நிறுவனத்தின் கீழ் இயங்கும் லேண்ட் ரோவர் நிறுவனம் வெலர் எனும் புதிய சொகுசு SUV மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் ரேஞ் ரோவர் எவோக் மற்றும் ரேஞ் ரோவர் ஸ்போர்ட் மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்படும்.

இந்த புதிய மாடல் மார்ச் 1 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். இந்த மாடல் ரேஞ் ரோவர் பிராண்டில் வெளியிடப்படும் மூன்றாவது மாடல் ஆகும். இந்த மாடல் ரேஞ் ரோவர் எவோக் மாடலை விட பெரியதாக இருக்கும்.  மேலும் இந்த மாடல் 2017 ஆம் ஆண்டு ஜெனிவா மோட்டார் கண்காட்சியிலும் நியூயார்க் வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.