புதிய XZ வேரியன்ட்டில் வெளியிடப்பட்டது டாடா நெக்ஸன்

டாடா நிறுவனம் நெக்ஸன் காம்பேக்ட் SUV மாடலை புதிய XZ வேரியன்ட்டில் வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேரியன்ட் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு எஞ்சினிலும் முறையே ரூ 7.99 லட்சம் மற்றும் ரூ 8.99 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடல் ஏற்கனவே XE, XM, XT மற்றும் XZ+ என நான்கு வேரியன்ட் டுகளில் வெளியிடப்பட்டு வந்தது. தற்போது கூடுதலாக XZ வேரியன்ட்டிலும் கிடைக்கும்.

இந்த புதிய XZ வேரியன்ட்டில் புலோட்டிங் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், உயரம் மாற்றக்கூடிய ஓட்டுநர் இருக்கை, கிளைமேட் கண்ட்ரோல், ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பார்க்கிங் அசிஸ்டன்ஸ் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, இந்த மாடல் அதே மூன்று சிலிண்டர் கொண்ட 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் நான்கு சிலிண்டர் 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜினில் கிடைக்கும். 1496cc கொள்ளளவு கொண்ட டீசல் என்ஜின் 110PS @ 3,750rpm திறனையும் 260Nm @ 1,500-2,750rpm இழுவைதிறனையும் வழங்கும். மற்றும் 1198cc கொள்ளளவு கொண்ட பெட்ரோல் என்ஜின் 110 PS @ 5,000rpm திறனையும் 170Nm @ 2,000-4,000rpm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடலின் இரண்டு என்ஜின்களுமே ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல்ட்ரான்ஸ் மிஷனில் கிடைக்கும். மேலும் இதன் டீசல் என்ஜின் மாடலில் ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என டிரைவிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.