ரூ. 15.87 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய டொயோடா கரோலா ஆல்டிஸ்

டொயோடா நிறுவனம் மேம்பாடுகப்பட்ட 2017 கரோலா ஆல்டிஸ் மாடலை ரூ. 15.87 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது தான் இந்த மாடல் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் நான்கு வேரியண்டிலும் டீசல் என்ஜினில் இரண்டு வேரியண்டிலும் கிடைக்கும்.

வெறியன்ட் வாரியாக இதன் டெல்லி ஷோரூம் விலை:
பெட்ரோல்:
G (MT) - ரூ 15.87 லட்சம்
G (CVT) - ரூ 17.52 லட்சம்
GL (MT) - ரூ 18.30 லட்சம்
VL (CVT) - ரூ 19.91 லட்சம்

டீசல்:
DG (MT) - ரூ 17.36 லட்சம்
DGL (MT) - ரூ 19.05 லட்சம் 

சில ஒப்பனை மாற்றங்களும் சில கூடுதல் உபகரணங்களும் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் புதிய க்ரில், புதிய பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், புதிய முகப்பு விளக்குகள் மற்றும் புதிய பெரிய பம்பர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. பின்புறத்தில் புதிய LED விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் சில  மாற்றங்கள்  மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

மேலும் என்ஜினில் மாற்றம் இல்லை அதே 1.8 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சினில் தான் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் 138 Bhp திறனையும் 173 Nm இழுவைத்திறனையும் வழங்கும். இதன் பெட்ரோல் என்ஜின் ஆறு ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏழு ஸ்பீட் CVT கியர் பாக்சில் கிடைக்கும். இதன் டீசல் என்ஜின் 87 Bhp திறனையும் 205 Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இதன் டீசல் என்ஜின் ஆறு ஸ்பீட் மேனுவல் கியர் பாக்சில் மட்டும் கிடைக்கும். இந்த மாடல் செவ்ரோலெட் குரூஸ், ஹூண்டாய் எலன்ட்ரா மற்றும் ஸ்கோடா ஆக்டேவியா போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.