டெல்லியில் புதிய சாலை விதிமுறை அமலுக்கு வந்தது

டெல்லியில் அதிகபடியான காற்று மாசுபாடு மற்றும் வாகன நெரிசல் காரணமாக ஜனவரி 1 முதல் ஒற்றை மற்றும் இரட்டை விதிமுறை சோதனை  முயற்சியாக அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த விதிமுறை படி ஒற்றை இலக்க தேதிகளில் ஒற்றை இலக்க பதிவு எண் கொண்ட கார்களும் இரட்டை இலக்க தேதிகளில் இரட்டை இலக்க பதிவு எண் கொண்ட கார்களும் மட்டுமே இயக்க வேண்டும்.

இதில் இரண்டு சக்கர வாகனங்களுக்கும், ஆட்டோ ரிக்சாக்களுக்கும், பெண்கள் இயக்கும் வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வாகனங்களை இயக்கினால் அபராதம் விதிக்கப்படும். முதல் நாளிலேயே மிக அதிகமான வாகன நெரிசல் குறைந்ததாக மக்கள் தெரிவித்தனர். அதிகமானோர் பணிக்கு செல்ல மிதிவண்டியை பயன்படுத்தியதை பார்க்க முடிந்தது.

டெல்லி அரசு அது குறித்து கூறிய போது 15 நாட்கள் சோதனை முயற்சி முடிந்தவுடன் இந்த விதி மீண்டும் நீட்டிக்கப்பட்டால் இருசக்கர வாகனங்களும், பெண்கள் இயக்கும் வாகனங்களும் இதில் சேர்த்துக்கொள்ளப்படும் என கூறியது. ஏனெனில் காற்று மாசுபடுத்துவதில் இருசக்கர வாகனங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏற்கனவே டெல்லியில் ட்ரக்குகளுக்கு தடையும் மேலும் 2000 cc கொள்ளளவுக்கு மேல் என்ஜின் கொண்ட கார்கள் பதிவு செய்ய தடையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.