விரைவில் இந்தியாவில் தயாரிக்கப்படும் அடுத்த தலைமுறை சுசூகி ஜிம்னி

பல வருடங்களாக எதிர்பார்க்கப்பட்ட சுசூகி ஜிம்னி மாடல் இறுதியாக இந்தியாவில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வெளியிடப்படுவது மட்டுமில்லாமல் இங்கு உற்பத்தி செய்து யூரோப், இந்தோனேசியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜிம்னி மாடல் தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஜிப்ஸி மாடலின் அடுத்த தலைமுறை மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய நான்காம் தலைமுறை ஜிம்னி மாடல் பலேனோ மற்றும் இக்னிஸ்  மாடலின் பிளாட்பார்மில் தான் உருவாக்கப்பட உள்ளது. இதன் உற்பத்தி 2017 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டால் சில மாற்றங்கள் செய்து 4 கதவு கொண்ட மாடலாகவும் வெளியிடப்படலாம். மேலும் எஞ்சினிலும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாடல்  சாமுராய் அல்லது ஜிப்ஸி என்ற பெயரில் இந்தியாவில் வெளியிடப்படலாம். மேலும் விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.