2017 ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் வெளியிடப்படும் அடுத்த தலைமுறை மாருதி சுசுகி ஸ்விப்ட்

அடுத்தை தலைமுறை மாருதி சுசுகி ஸ்விப்ட் மாடல் அதிகாரப்பூர்வமாக 2017 ஆம் ஆண்டு ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்விப்ட் மாடல் 2004 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாடல் இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற மாடல்களில் ஒன்று.

அடுத்தை தலைமுறை மாருதி சுசுகி ஸ்விப்ட் மாடலின் சோதனை ஓட்ட படங்கள் இணயத்தில் பல முறை கசிந்துள்ளது. இந்த படங்களை வைத்து பார்த்தல் மாருதி சுசுகி நிறுவனம் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் ஏராளமான ஒப்பனை மாற்றங்கள் செய்துள்ளதாக தெரிகிறது. முன்புறத்தில் புதிய அருங்கோன வடிவ கிரில், புதிய முகப்பு விளக்குகள், புதிய பனி விளக்கு அறை மற்றும் பின்புறத்தில் புதிய பின்புற விளக்குகள் முற்றிலும் புதிய தோற்றத்தை தருகிறது. மேலும் பக்கவாட்டு கோடுகளும் சிறிது மாற்றப்பட்டுள்ளது. இரண்டாம் கதவுக்கான கைப்பிடிகள் விண்ட்  சீல்டில் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறம் டேஸ் போர்டு, ஸ்டீரிங் வீல் என முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த மாடல் 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் எஞ்சினிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அடுத்த தலை முறை ஸ்விப்ட் மாடல் அடுத்த வருடத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.