அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் E - கிளாஸ் மாடலின் படங்கள் கசிந்தது

அடுத்த தலைமுறை E - கிளாஸ் மாடலின் வரைபடத்தையும் டீசர் வீடியோவையும் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட நிலையில் தற்போது அந்த மாடலின் அதிகாரபூர்வ படங்கள் கசிந்தது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2015 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக 15 மாடல்களை வெளியிட்ட நிலையில் தற்போது வெற்றிகரமாக 2016 ஆம் ஆண்டை தொடங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் டெட்ராய்ட்  மோட்டார் கண்காட்சியில் இந்த மாடல் வெளியிடப்படும்.

புதிய LED மற்றும் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் நீண்ட முன்புற ஹூட் என முற்றிலும் நவீனமான வடிவத்தில் வடிவமைக்கப்படுள்ளது.  உட்புறம் மிக மிக சொகுசான மற்றும் நவீனமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இரண்டு கதவு கொண்ட கூப் மற்றும் கன்வெர்டிப்ல் மாடலையும் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. என்ஜினில் மாற்றம் இருக்காது என்றே எதிர்பார்க்கபடுகிறது. இந்த மாடல் ஐரோப்பில் வெளியிடப்பட்ட பிறகு இந்தியாவில் வெளியிடப்படும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.