அடுத்த தலைமுறை சாங் யாங் ரெக்ஸ்டன் தயாரிப்பு நிலை மாடலின் படங்கள் வெளியிடப்பட்டது

சாங் யாங் நிறுவனம் அடுத்த தலைமுறை ரெக்ஸ்டன் தயாரிப்பு நிலை மாடலின் படங்கள் வெளியிட்டுள்ளது. இந்த மாடலை 2017 ஆம் ஆண்டு சியோல் மோட்டார் கண்காட்சியில் வெளிப்படுத்த இருக்கிறது. இந்த மாடலின் கட்டமைப்பு அதிக உறுதித்தன்மை கொண்டதாகவும் 50 கிலோ கிராம் வரை குறைவான எடை கொண்டதாகவும் இருக்கும். இந்த மாடல் அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட மாடலாகவும் சிறந்த ஏரோ டைனமிக் கொண்டதாகவும் இருக்கும் எனவும் சாங் யாங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அடுத்த தலைமுறை சாங் யாங் ரெக்ஸ்டன் மாடலிலும் அதே 2.2 லிட்டர் டீசல் என்ஜின் தான் பொருத்தப்பட்டிருக்கும். இது 178 Bhp  திறனை வழங்கும். மேலும் இந்த மாடல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடனும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்சுடனும் கிடைக்கும். 

உட்புறமும் முற்றிலும் புதிதாக கருப்பு மற்றும் பிரவுன் வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம், காற்றுப்பை என ஏராளமான வசதிகள் கொண்டதாகவும் இருக்கும். இந்த மாடல் தொடர்பான மேலும் விவரங்களை ஒரு சில நாட்களில் தெரிந்து கொள்ளலாம். இந்த மாடல் விரைவில் கொரியாவில் வெளியிடப்படும். ஆனால் இந்தியாவில் வெளியிடப்படும் என்று தெரியவில்லை ஏனெனில் மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே  சாங் யாங் பிராண்டில் எந்த மாடலும் இனிமேல் வெளியிடப்பட மாட்டாது என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.