மீண்டும் தள்ளிப்போனது நிசான் GT-R வெளியீடு- டிசம்பர் 2 ஆம் தேதி வெளியிடப்படும்

நிசான் நிறுவனம் GT-R மாடலை நவம்பர் 9 ஆம் தேதி வெளியிடுவதாக இருந்தது ஆனால் மீண்டும் தற்போது டிசம்பர்  2 ஆம் தேதிக்கு வெளியீட்டை மாற்றியுள்ளது. இதன் முன்பதிவு ஏற்கனவே நடைபெற்று வருகிறது. ரூ.25 லட்சம் முன்பணமாக செலுத்தி இந்த மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நிசான் GT - R மாடல் அதிக செயல்திறன் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். இந்த மாடலில் 3.8 லிட்டர் ட்வின் டர்போ V 6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 562 bhp திறனையும் 637Nm இழுவைதிரனையும் வழங்கும். இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. மேலும் இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 310 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும், ஆறு ஸ்பீட் கொண்ட டியூவல் கிளட்ச் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு GT - R மாடலில் புதிய க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஆரஞ்சு, சிவப்பு, ப்ளூ, கருப்பு, வெள்ளை, மெட்டாலிக் மற்றும் சில்வர் என ஏழு வண்ணங்களில் கிடைக்கும். மேலும் இந்த மாடல்  2 கோடி விலையில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.